எருமப்பட்டியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

எருமப்பட்டியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது.;

Update: 2022-08-11 12:03 GMT

எருமப்பட்டி:

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய குழு தலைவர் சங்கீதா தலைமை தாங்கினார். இதில் எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணாளன், பிரபாகரன் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பிரதிநிதிகள், காவல் துறையினர், வருவாய் துறையினர், சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சமூகத்திலும், வீட்டிலும், பள்ளியிலும் குழந்தைகள் எதிர் கொள்ளும் சவால்கள், அவைகளை தீர்க்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்