பா.ஜ.க. செயற்குழு கூட்டம்

பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நடந்தது.;

Update:2022-08-06 22:45 IST

மானாமதுரை,

மானாமதுரை பா.ஜ.க. நகர் மற்றும் கிழக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் மேப்பல் சத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது, மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், மாவட்ட செயலாளர் சங்கர சுப்பிரமணியன், மாவட்ட பொறுப்பாளர் பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்தலைவர் முனியசாமி வரவேற்று பேசினார். இதில் மேற்கு, கிழக்கு ஒன்றிய தலைவர்கள், நகர துணை தலைவர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், மானாமதுரை பகுதிகளில் தொடர்ந்து திருட்டு மற்றும் சமூக விரோத செயல்கள் அதிகமாக நடைபெறுவதை தடுக்கவும், ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும், மானாமதுரை போலீஸ் நிலையத்திலிருந்து பழைய பஸ் நிலையம் செல்வதற்கு நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் வைகை ஆற்றில் தரைப்பாலம் அமைக்க வேண்டும், மானாமதுரையில் பெண்கள் கல்லூரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கூட்டத்துக்கு பா.ஜனதாவினர் ஊர்வலமாக வந்தனர்.




Tags:    

மேலும் செய்திகள்