அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ சேவை
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ சேவையை அமைச்சர்கள் ெதாடங்கி வைத்தனர்.;
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ சேவையை அமைச்சர்கள் ெதாடங்கி வைத்தனர்.
உயர்படிப்பு
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ சேவையினை கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அப்போது அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசுகையில், மருத்துவ படிப்பு படிக்கும் மாணவ- மாணவிகள் நல்ல முறையில் படித்து உயர் படிப்புகளையும் பயின்று மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றார்.
மருத்துவ சேவை
அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:- ஒரு காலத்தில் காட்டு ஆஸ்பத்திரி என்று அழைக்கப்பட்ட இந்த ஆஸ்பத்திரியில் தான் நான் பிறந்தேன். தற்போது ரூ. 169 கோடியில் இந்த ஆஸ்பத்திரி கட்டப்பட்டுள்ளது. மிக பெருமையாக உள்ளது. மேலும் அனைத்து மருத்துவவசதிகளும் இங்கு கிடைக்கும் வகையில் சிறப்பான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து கூட விருதுநகருக்கு சிகிச்சை பெறுபவர்களை அனுப்பி வைக்கும் அளவுக்கு இங்கு மருத்துவ சேவை தரம் உயர்ந்துள்ளது என்றார்.
தமிழகம் முதலிடம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசு கடைக்கோடி தமிழருக்கும் மருத்துவம் சென்றடையும் வகையில் மருத்துவ கட்டமைப்பில் மிக சிறந்த இடத்தில் உள்ளது. அனைவருக்குமான மருத்துவ சேவை, கர்ப்பிணிகளுக்கு மஞ்சள் காமாலை கண்டறிதல், சுகப்பிரசவம் உள்ளிட்டவைகளில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
மேலும் மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் உள்ளிட்ட சிறப்பு திட்ட செயல்பாட்டிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் நவாஸ் கனி, தனுஷ் குமார், எம்.எல்.ஏ.க்கள் சீனிவாசன், தங்கப்பாண்டியன், ரகுராமன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சங்கு மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வெள்ளையங்கி
இதனைத்தொடர்ந்து முதலாமாண்டு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு வெள்ளையங்கியினை அமைச்சர்கள் அணிவித்தனர். மேலும் தமிழ் மன்ற பொறுப்பாளர்களுக்கு அமைச்சர்கள் பதவியேற்பு செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி, சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் முருகவேல், விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.