மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.;
கே.வி.குப்பம்
மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
கே.வி.குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாமை நடத்தியது.
முகாமில் கே.வி.குப்பம் வட்டாரக் கல்வி அலுவலர் ராபர்ட் இளவரசரன், மேற்பார்வையாளர் என்.ஜி.சிவகுமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட மாற்றுத் திறனாளி நலத்துறை அலுவலர் சரவணகுமார் இதனை தொடங்கி வைத்தார். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை எலும்பியல் சிறப்பு மருத்துவர், உளவியல் மருத்துவர், கண் மருத்துவர், குழந்தைகள் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் என பல்வேறு துறை மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறன் குழந்தைகள் 125 பேருக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டு முகாமை ஒருங்கிணைத்தனர்.