மத்திய சிறையில் மருத்துவ முகாம்
மத்திய சிறையில் மருத்துவ முகாம் நடந்தது.;
கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் கைதிகளின் உடல்நலத்தை பேணி காப்பதற்காக 100 சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் மதுரை மத்திய சிறை இணைந்து நேற்று மருத்துவ முகாம் நடந்தது. டாக்டர் மாரீஸ்வரன் தலைமையில் டாக்டர்கள், மருத்துவ குழுவினர் உள்பட 17 பேர் கொண்ட மதுரை மத்திய சிறை மற்றும் பெண்கள் சிறையில் உள்ள கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டனர். இதனை மதுரை சரக சிறை துறை தலைவர் பழனி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். அதில் கண் மற்றும் பொது மருத்துவம், இதயம், எலும்பு மற்றும் மூட்டு சிறப்பு மருத்துவம், காது, மூக்கு, தொண்டை தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு கைதிகளை பரிசோதனை செய்தனர். இதன் முலம் மத்திய சிறையில் 323 கைதிகளும், பெண்கள் தனிச்சிறையில் 36 பெண்கள் என மொத்தம் 359 பேர் பயன் பெற்றனர். மேலும் இந்த சிறப்பு மருத்துவ முகாம் மாதந்தோறும் நடைபெறும் என்று சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.