தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
திருவாரூர் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.;
திருவாரூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளிலும் தூய்மை பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் நகராட்சியில் தூய்மை பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான மருத்துவ முகாம் நேற்று நடந்தது. கொடிக்கால்பாளையம் நகர் புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த மருத்துவ முகாமினை நகரசபை தலைவர் புவனபிரியா செந்தில் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். முகாமில் மருத்துவ அலுவலர் ராஜகுரு தலைமையில் மருத்துவ குழுவினர் தூய்மை பணியாளர்களுக்கு உரிய பரிசோதனை செய்து, தேவையான மருத்துவ ஆலோசனை, மருந்து, மாத்திரைகள் வழங்கினர். இதில் துப்புரவு ஆய்வாளர் தங்கராம், நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர் ரமேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.