தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்

அரியலூர் நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.;

Update: 2023-09-30 18:48 GMT

அரியலூர் நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், நகராட்சி துணைத்தலைவர் கலியமூர்த்தி கலந்து கொண்டார். முகாமில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு வகையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் அவர்களில் சிறப்பு சிகிச்சை தேவைப்படுபவர்கள் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில், பொது சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ பணிகள் மருத்துவர்கள், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துப்புரவு மேற்பார்வையாளர் தர்மராஜா செய்திருந்தார். இந்த முகாமில் ஏராளமான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்