தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது;
சோழவந்தான்,
சோழவந்தான் பேரூராட்சியில் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்பட அனைத்து நோய்களுக்கும் மருத்துவ பரிசோதனை 3 மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இதே போல் நேற்று பேரூராட்சி திருமண மண்டபத்தில் பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு மேலக்கால் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கிஷாமகேஷ் தலைமையில் மருத்துவக்குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்து மாத்திரை, மருந்து வழங்கினர். செயல்அலுவலர் பொறுப்பு ஜீலான்பானு, சுகாதாரபணி ஆய்வாளர் முருகானந்தம், அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார வட்டாரமேற்பார்வையாளர் முத்துராஜ், சுகாதாரஆய்வாளர்கள் பிரபாகரன், சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.