விருத்தாசலத்தில்ரெயில்வே ஊழியர்களுக்கு மருத்துவ முகாம்
விருத்தாசலத்தில் ரெயில்வே ஊழியர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.;
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் ரெயில்வே மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் திருச்சி கோட்ட முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர் விஜயலட்சுமி நடராஜன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ரெயில்வே ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
இதில் கண், ரத்த அழுத்தம், இருதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்க கிளை செயலாளர் கணேஷ்குமார் தலைமையில், தலைவர் செல்வம், கோட்ட உதவி செயலாளர் சசிகுமார், கிளை பொருளாளர் வீரக்குமார், உதவி செயலாளர் முத்துராமன் உள்ளிட்ட நிர்வாகிகள், முதன்மை மருத்துவ கண்காணிப்பாளர் விஜயலட்சுமி நடராஜனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் விருத்தாசலம் ரெயில்வே மருத்துவமனைக்கு மருந்து, மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலம் பகுதியில் உள்ள ஆய்வகங்களில் ரத்த பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே எடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதில், ரெயில்வே மருத்துவர் விஜயராகவன் மற்றும் முதன்மை சுகாதார ஆய்வாளர் வசந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.