மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்

செம்பனார்கோவிலில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடந்தது

Update: 2023-02-07 18:45 GMT

திருக்கடையூர்:

செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார், ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன் முன்னிலை வகித்தார். முகாமில் டாக்டர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து அடையாள அட்டை வழங்கினர். இதில் இலவச ரெயில் மற்றும் பேருந்து பயணச் சலுகை, உதவி தொகைக்கான பதிவு, மறுமதிப்பீடு, மாத பராமரிப்பு உதவித்தொகை பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கினர். முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், உடல் இயக்க வல்லுநர் ரூபன் ஸ்மித், வட்டார வளமைய மேற்பார்வையாளர் நூர்பி, ஆசிரியர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்