தின்னப்பட்டியில் தி.மு.க. சார்பில்இலவச மருத்துவ முகாம்
தின்னப்பட்டியில் தி.மு.க. சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.;
ஓமலூர்
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. மருத்துவ அணி சார்பில் காடையாம்பட்டி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட தின்னப்பட்டியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சேலம் மத்திய மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அருள் வரவேற்றார். காடையாம்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கி முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதில் காடையாம்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய அவைத்தலைவர் பெருமாள், காடையாம்பட்டி நகர செயலாளர் பிரபாகரன், ஓமலூர் தொகுதி மருத்துவ அணி நிர்வாகிகள் டாக்டர் கோபிநாத், டாக்டர் காயத்ரி, ஒன்றிய நிர்வாகிகள் லட்சுமணன், குட்டி, தண்டபாணி சேகர், செல்வம், சண்முகம், தங்கவேல், கிருபாகரன், தர்மலிங்கம், கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.