கார் மோதி மெக்கானிக் பலி

ஓசூரில் கார் மோதி மெக்கானிக் இறந்தார்.;

Update:2022-07-16 22:27 IST

ஓசூர்

பெங்களூரு ஜே.பி. நகரை சேர்ந்தவர் சாஜாத் செரீப் (வயது 52). இருசக்கர வாகன மெக்கானிக். சம்பவத்தன்று இவர் ஓசூரில் இருந்து மூக்கண்டப்பள்ளி பாலம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் அவர் மீது மோதியது. இதில் சாஜாத் செரீப் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்