தனி நலவாரியம் அமைக்க வேண்டும் மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் கோரிக்கை

தனி நலவாரியம் அமைக்க வேண்டும் மோட்டார் வாகன பழுது பார்ப்போர் நலச்சங்கம் கோரிக்கை;

Update: 2022-07-11 14:24 GMT

ராசிபுரம் நகர மோட்டார் வாகன பழுதுபார்ப்போர் நலச்சங்கத்தினர் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், மக்களின் அத்தியாவசியமான பொருட்களை எடுத்து செல்வதிலும், கனரக வாகனங்களின் பயன்பாடு மிகவும் அதிகம். இந்த கனரக வாகனங்களை பழுது பார்க்கும் தொழிலாளர்களின் தொழில், சில நேரங்களில் மிகவும் ஆபத்தாக உள்ளது. சில வாகனங்கள், சாலை நடுவில் பழுது ஏற்பட்டு நின்றுவிட்டால் இரவு, பகல், வெயில், மழை என பார்க்காமல், தொழிலாளர்கள் விரைந்து சென்று பழுது பார்த்து சரி செய்கின்றனர்.

எனவே அனைத்து மாவட்டத்தில் உள்ள மோட்டார் வாகனம் பழுது பார்ப்போர் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு மோட்டார் வாகனம் பழுதுபார்க்கும் தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைத்துத்தர, தமிழக முதல்-அமைச்சருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

இதேபோல் கொரோனா தொற்றுக்கு பிறகு எங்களின் வருமானம் குறைவாகவே உள்ளது. தினக்கூலி வருமானத்தில் பெருந்தொகையை வாடகைக்கே செலுத்த நேரிடுகிறது. எனவே இத்தொழிலில் ஈடுபட்டு உள்ள 110-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தினை கருத்தில் கொண்டு வாகனம் பழுது பார்க்கும் நகர் அமைக்க அரசு மானிய விலையில் இடம் ஏற்பாடு செய்து தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்