வள்ளலார் தினத்தை முன்னிட்டு சேலத்தில் இன்று இறைச்சி கடைகளை மூட உத்தரவு

வள்ளலார் தினத்தை முன்னிட்டு சேலத்தில் இன்று இறைச்சி கடைகளை மூட மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டு உள்ளார்.;

Update: 2023-02-04 21:49 GMT

சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வள்ளலார் தினத்தை முன்னிட்டு இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்பட கூடாது. எனவே உரிமையாளர்கள் தாங்கள் நடத்தும் இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகளை மூட வேண்டும். அனைத்து இறைச்சி கடைகள் மற்றும் இறைச்சி கூடங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளதா? என்பதை சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, மாநகராட்சியின் அறிவிப்பை செயல்படுத்தாத இறைச்சி கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்