"சென்னையில் 100 சதவீதம் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்" - மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார்

2 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய பணிகளை ஆறே மாதங்களில் முடித்து விட்டதாக சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-11-03 15:21 GMT

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆண்டுகளில் மழைக்காலத்தின் போது தண்ணீர் தேங்கிய இடங்களில், இந்த ஆண்டு நீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதனிடையே சென்னையில் புளியந்தோப்பு, பட்டாளம், கொளத்தூர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இது குறித்து தந்தி டி.வி.க்கு பேட்டியளித்த சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், தாழ்வான பகுதிகளில் தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

2 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய பணிகளை ஆறே மாதங்களில் முடித்து விட்டதாக குறிப்பிட்ட அவர், 90 சதவீதம் அனைத்து இடங்களிலும் மழைநீர் வடிந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்தார். மேலும் வரும் காலங்களில் சென்னையில் 100 சதவீதம் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்