சத்துணவு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகை கிடைக்க நடவடிக்கை

பணி ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களிடம் பிடித்த செய்த தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.;

Update: 2022-05-30 18:36 GMT

விருதுநகர், 

பணி ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்களிடம் பிடித்த செய்த தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

பணி ஓய்வு

பணி ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சங்க தலைவர் அய்யம்மாள் தலைமையில் கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

பணி ஓய்வு பெறும்போது தரப்பட வேண்டிய ஒட்டு மொத்த தொகை ரூ.1 லட்சத்தில் ரூ.10 ஆயிரம் பிடித்தம் செய்து ரூ. 90 ஆயிரம்மட்டும் கொடுத்ததாகவும், தற்போது நாங்கள் செலுத்த வேண்டிய தொகையை செலுத்திய பின்பும் பிடித்தம் செய்த தொகையை தர அதிகாரிகள் மறுக்கும் நிலை உள்ளது.

மாத ஓய்வூதியத்தை மாதாமாதம் வழங்காமல் 3 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கும் நிலை உள்ளதாகவும், சேமநல நிதிதொகையை வழங்குவதற்கு காலதாமதப்படுத்துவதாகவும் இதனால் பணி ஓய்வு பெற்றவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உள்ளதால் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

உருவப்படம்

சிவகாசி மாநகராட்சி 23-வது வார்டு கவுன்சிலர் அசோக்குமார் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அரசு உத்தரவிட்டுள்ளபடி சிவகாசி மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் அரங்கத்தில் டாக்டர் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், காயிதே மில்லத் ஆகிய தேசியத்தலைவர் உருவப்படங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வைப்பதற்கு தாங்கள் ஆவண செய்யுமாறு வேண்டுகிறோம் என கூறப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்