ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம்
ம.தி.மு.க. கையெழுத்து இயக்கம் ராஜபாளையத்தில் நடைபெற்றது.;
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் தமிழக கவர்னரை திரும்ப பெற வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. ம.தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் சத்திரபட்டியில் உள்ள நடுத்தெருவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். ரகுராமன் எம். எல். ஏ, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை கிழக்கு ஒன்றிய செயலாளர் மனோகரன் செய்திருந்தார். இதில் தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவண முருகன், தலைமை கழக பேச்சாளர் ஆசிலாபுரம் பாண்டுரங்கன், ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் ராஜபாளையம் ம.தி.மு.க. நகர செயலாளர் மதியழகன், சத்திரப்பட்டி கிளை செயலாளர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.