ம.தி.மு.க. கொடியேற்று விழா

நாலாட்டின்புத்தூர் அருகே இளையரசனேந்தலில் ம.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது.;

Update:2023-05-07 00:15 IST

நாலாட்டின்புத்தூர்:

நாலாட்டின்புத்தூர் அருகே இளையரசனேந்தல் கிராமத்தில் ம.தி.மு.க சார்பில் 30-வது ஆண்டு கொடியேற்று விழா நடைபெற்றது. குருவிகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜகோபால் தலைமை தாங்கி பஸ்நிறுத்தம் அருகே உள்ள கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றினார். அவைத்தலைவர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் காளிராஜ், குருவிகுளம் யூனியன் தலைவர் விஜயலட்சுமி கனகராஜ், மாவட்ட பிரதிநிதிகள் ராமசுப்பு, ஜெயராஜ், விஜயகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வடக்குபட்டி சுப்புராஜ், வலசை கனகராஜ், வெங்கடாசலபுரம் பஞ்சாயத்து தலைவர் பேச்சிமுத்து, பிள்ளையார் நத்தம் பஞ்சாயத்து துணை தலைவர் லிங்கன், இளையரசனேந்தல் பஞ்சாயத்து துணை தலைவர் ராஜாராம், வெங்கடாசலபுரம் பஞ்சாயத்து துணை தலைவர் ரங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் செல்வராஜ், ஆத்தியப்பன், பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்