மேலப்பாளையம் மண்டல பகுதியில் மேயர் பி.எம்.சரவணன் ஆய்வு

நெல்லை மேலப்பாளையம் மண்டல பகுதியில் மேயர் பி.எம்.சரவணன் ஆய்வு செய்தார்.

Update: 2023-08-04 20:05 GMT

நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 44-வது வார்டு பாரதியார்புரம் பகுதியில் செயல்பாடு இல்லாமல் உள்ள சுகாதார வளாகம், செய்குல் அக்பர் தெருவில் உள்ள கழிவு நீரோடை, மேத்தமார்பாளையம் சிறு பாலம் ஆசாத் மாநகராட்சி பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை உள்ளிட்டவைகளை மேயர் சரவணன் நேரில் பார்த்து ஆய்வு செய்தார். நேதாஜி ரோடு, ஆசாத் ரோடு சந்திப்பில் கழிவு நீரோடை அமைக்கும் பணி போன்ற வேலைகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து நெல்லை டவுன் 14-வது வார்டு அமீர்சாகிப் நகர் பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். செயற்பொறியாளர் வாசுதேவன், உதவி ஆணையாளர் காளிமுத்து, உதவி செயற்பொறியாளர், பைஜூ, உதவி பொறியாளர் சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர் நடராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்