தூய்மை பணியாளர்களுக்கு உடைகள்
தூய்மை பணியாளர்களுக்கு இலவச உடைகளை மேயர் வழங்கினார்.;
வேலூர் கொணவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல்பண்டிகையை முன்னிட்டு இலவசமாக உடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத் முன்னிலை வகித்தார்.
சுமார் 70-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு அவர்களின் பணியை பாராட்டும் வகையில் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு சேலை, உள்ளிட்ட உடைகளை மாநகராட்சி மேயர் வழங்கி, தூய்மை பணியாளர்களின் பணிகளை பாராட்டி பேசினார்.