கல்லூரி விடுதியில் தங்கி படித்த மாணவர் மாயம்
கல்லூரி விடுதியில் தங்கி படித்த மாணவர் மாயம்
திருவட்டார்:
குலசேகரத்தில் தனியார் கல்லூரி உள்ளது. இங்கு தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த சக்கமான் துரையின் மகன் சதீஷ்குமார் (வயது 20) விடுதியில் தங்கி, பி.எஸ்சி நர்சிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்பு தன் நண்பர்களை பார்க்க வேண்டுமென்று கூறி விட்டு சதீஷ்குமார் வெளியே சென்றார். அதன் பின்னர் கல்லூரி விடுதிக்கு அவர் திரும்பி வரவில்லை. இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் நண்பர்கள் வீடு உள்பட பல இடங்களில் சதீஷ்குமாரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. அதைத்தொடர்ந்து மாணவரின் தந்தை குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாணவரை தேடி வருகிறார்கள்.