மது அருந்துவதற்கு மனைவி பணம் தராததால் பெட்ரோல் ஊற்றி கொத்தனார் தீக்குளிப்பு

பல்லாவரம் அருகே மது அருந்துவதற்கு மனைவி பணம் தராததால் பெட்ரோல் ஊற்றி கொத்தனார் தீக்குளித்தார்.

Update: 2023-02-07 04:46 GMT

பல்லாவரத்தை அடுத்த அனகாபுத்தூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் வயது (30). இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெங்கடேஷ் குடிப்பதற்கு தன் மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மனைவி வேலைக்குப் போவதற்கு பணம் கேட்டால் கூட தருவேன். ஆனால் குடிப்பதற்கு என்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார்

இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேசன் தனது இரு சக்கர வாகனத்திலிருந்து பெட்ரோலை பிடித்து தலையில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மனைவி கத்தி கூச்சலிட்டுள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து தீக்காயம் அடைந்த வெங்கடேசனை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று முதல்உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்