திருமணமாகாத ஏக்கத்தில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை

களியக்காவிளை அருகே திருமணமாகாத ஏக்கத்தில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;

Update: 2022-12-16 18:45 GMT

களியக்காவிளை:

களியக்காவிளை அருகே திருமணமாகாத ஏக்கத்தில் கொத்தனார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கொத்தனார்

குழித்துறை அருகே விளவங்கோடு கொல்லக்குடி பகுதியை சேர்ந்தவர் அனில்குமார் (வயது 37). இவர் வெளிநாட்டில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். பின்னர் கொரோனா காலத்தில் அனில்குமார் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். அதன்பிறகு வெளிநாட்டுக்கு செல்லாமல் தாயார் தங்கத்துடன் வீட்டில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் அனில்குமாருக்கு அவரது தாயார் திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து வந்தார். ஆனால் பல இடங்களில் பெண் பார்த்தும் சரியாக அமையவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக அனில்குமார் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அனில்குமார் சாப்பிட்டு விட்டு தூங்கச் சென்றார். நேற்று காலையில் வெகுநேரம் ஆகியும் அவரது அறைக்கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகமடைந்த தங்கம் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு அனில்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதார். பின்னர் இதுபற்றி களியக்காவிளை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அனில்குமாரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்