டாஸ்மாக் கடையில் முகமூடி கொள்ளை
களக்காடு அருேக, டாஸ்மாக் கடையில் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி கொள்ைளயர், ‘குவாட்டர்’ மதுபாட்டில்களை மட்டும் அள்ளிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;
களக்காடு:
களக்காடு அருேக, டாஸ்மாக் கடையில் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த முகமூடி கொள்ைளயர், 'குவாட்டர்' மதுபாட்டில்களை மட்டும் அள்ளிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பூட்டிக்கிடந்த கடை
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே வடகரை-பத்மநேரி இசக்கியம்மன் கோவில் சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
ஊருக்கு சற்று வெளியே அமைந்துள்ள இந்த கடையில் கோபாலசமுத்திரத்தை சேர்ந்த மாரியப்பன் (வயது 49), அம்பையை சேர்ந்த ஆறுமுகம் (48) ஆகியோர் விற்பனையாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவில் விற்பனை முடிந்ததும் கடையை அடைத்து விட்டு சென்று விட்டனர். பின்னர் நேற்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ.84 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதிகளவில் குவாட்டர் மதுபாட்டில்களை மட்டுமே அள்ளிச்சென்றுள்ளனர். மற்ற மதுபாட்டில்களை கொள்ளையர்கள் விட்டுச்சென்று விட்டனர். அவை அடுக்கி வைத்தபடியே இருந்தன.
கண்காணிப்பு கேமரா துண்டிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்ததும் களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரெங்கசாமி, ராமநாதன், அமலன் (பயிற்சி) மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இரவில் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே சென்று இந்த துணிகர செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. கடையின் முன்பு வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவின் இணைப்பையும் துண்டித்துள்ளனர்.
முகமூடி கொள்ளையர்
ஆனால், மற்றொரு பகுதியில் வைக்கப்பட்டுள்ள கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவு 1.15 மணிக்கு தலை மற்றும் முகங்களில் துண்டை கட்டி முகமூடி அணிந்ததுபோல் வந்த மர்ம நபர் கையில் இரும்பு கம்பியுடன் டாஸ்மாக் கடைக்கு சென்று, கடையின் அருகே உள்ள மின்வேலியை உடைத்து விட்டு கைவரிசை காட்டியதும் பதிவாகி உள்ளது. ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
மீண்டும் துணிகரம்
இந்த கடையில் ஏற்கனவே கடந்த மாதம் 23-ந் தேதி இரவில் இதேபோல மர்ம நபர்கள் ரூ.44 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை திருடி சென்றனர். தற்போது 2-வது முறையாக மீண்டும் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தீவிர விசாரணை நடத்தி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.டாஸ்மாக் கடையில் ஷட்டரை உடைத்து மதுபாட்டில்களை கொள்ளை அடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.