குளச்சலில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு ஆர்ப்பாட்டம்

குளச்சலில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-08-26 18:53 GMT

குளச்சல், 

குளச்சலில் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

குஜராத் மாநிலத்தில் கர்ப்பிணி பில்கிஸ்பானுவை கற்பழித்து, அவரது குடும்பத்தினர் 7 பேரை கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

அதை கண்டித்தும், மீண்டும் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வலியுறுத்தியும் குளச்சல் காமராஜர் பஸ் நிலையத்தில் குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மக்கள் ஜனநாயகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு செயலாளர் வக்கீல் பால்ராஜ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்