மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சிவகிரி அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2022-07-26 15:46 GMT

சிவகிரி:

சிவகிரியில் இருந்து குமாரபுரம் வழியாக தேவிபட்டணம் செல்லும் நெடுஞ்சாலையை செப்பனிட வேண்டும், பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வை குறைக்க வேண்டும், வனவிலங்குகளிடமிருந்து விவசாய பயிர்களை பாதுகாக்க வனப்பகுதியில் சோலார் மின் வேலியும். அகழி கிடங்குகளும் அமைத்துக் கொடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தேவிபட்டணத்தில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச்செயலாளர்கள் பூல்பாண்டியன், புஷ்பம் ஆகியோர் தலைமை தாங்கினர். இக்னேசியஸ் சுவாமி, பேச்சியம்மாள், போத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தேவிபட்டணம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜெயராஜ், ஒன்றிய செயலாளர் நடராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் சக்திவேல், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அமல்ராஜ், சுப்பிரமணியன், ரவீந்திரநாத் பாரதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

முன்னதாக கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரி நிகழ்ச்சி நடத்தினர்.


Tags:    

மேலும் செய்திகள்