திருவெறும்பூர் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவெறும்பூர் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2022-11-12 00:49 IST

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு காட்டூர் பகுதி தலைவர் செந்தில் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் ரேணுகா, மாவட்ட பகுதி குழு செயலாளர் மணிமாறன், மாவட்டச் செயலாளர் ராஜா, ஆகியோர் கண்டன உரையாற்றினர். பின்னர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பக்ருதீனிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அப்போது, கோரிக்கை மனு மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உயிர் காக்கும் மருந்துகள், நாய், பாம்பு கடிக்கு மருந்துகள் வழங்க வேண்டும். 24 மணி நேரமும் மருத்துவர் இருக்க வேண்டும், 108 ஆம்புலன்ஸ் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும், மருத்துவமனை தரம் உயர்த்தி நோயாளிகளுக்கு படுக்கை வசதியுடன் மருத்துவம் பார்க்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்