தியாகதுருகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தியாகதுருகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-08-31 15:11 GMT

கண்டாச்சிமங்கலம், 

தியாகதுருகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கள்ளக்குறிச்சி வட்ட செயலாளர் அருள்தாஸ் தலைமை தாங்கினார். உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் சீனுவாசன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் மணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் தியாகதுருகத்தில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கரு கலைப்பு செய்த பெரியநாயகி குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும், கரு கலைப்பு செய்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்