மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திரிபுரா தாக்குதலை கண்டித்து தேனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
தேனி பழைய பஸ் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஊழியர்கள் அலுவலகம் மற்றும் பொதுமக்கள் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தாலுகா செயலாளர் தர்மர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அண்ணாமலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், வெங்கடேசன், முனீஸ்வரன், வெண்மணி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்தும், பா.ஜ.க.வினரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்டக் குழு உறுப்பினர் நாகராஜ் நன்றி கூறினார்.