மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மேலப்பிடாகையில் குடிநீர் வழங்கக்கோரி மேலப்பிடாகையில் குடிநீர் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.த்தில் ஈடுபட்டனர்.
வேளாங்கண்ணி:
மேலப்பிடாகையில் குடிநீர் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
வேளாங்கண்ணி அருகே கீழையூர் மேற்கு ஒன்றிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஒரு வாரத்திற்கு ஒருமுறை கூட குடிநீர் வருவதில்லை. இதை தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்கி அனைத்து ஊராட்சிகளுக்கும் குடிநீர் வழங்கக்கோரி கீழையூர் மேற்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மேலப்பிடாகை கடைத்தெருவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்டகுழு உறுப்பினர் சித்தார்த்தன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், விவசாய சங்க ஒன்றியக்குழு உறுப்பினர் பால்சாமி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த குடிநீர் மற்றும் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர் தியாகராஜன், கீழையூர் ஒன்றியக்குழு தலைவர் செல்வராணி ஞானசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன், கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.