மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா: சிவகங்கை மாவட்டத்தில் 27ந் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் 27ந்தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-10-18 19:30 GMT


சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- விடுதலை போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் குருபூஜை விழா வருகிற 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காளையார்கோவிலில் உள்ள அவர்களின் நினைவிடத்தில் நடைபெற உள்ளது.

எனவே, அன்றைய தினம் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவகோட்டை ஆகிய ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்