தில்லையாடியில் தியாகி வள்ளியம்மைநினைவு தினம் அனுசரிப்பு

தில்லையாடியில் தியாகி வள்ளியம்மை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

Update: 2023-02-22 18:45 GMT

பொறையாறு:

தில்லையாடியில் தியாகி வள்ளியம்மை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

தியாகி வள்ளியம்மை நினைவு தினம் அனுசரிப்பு

பொறையாறு அருகே தில்லையாடியில் தியாகி வள்ளியம்மையின் 109-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தியாகி வள்ளியம்மை நினைவு மண்டப வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வள்ளியம்மை உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கி, சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது மண்டபத்தில் உள்ள வரலாற்று நிகழ்வு புகைப்படம் மற்றும் ஓவியங்களை கலெக்டருக்கு காப்பாளர் ஹைதர் அலி விளக்கி கூறினார்.

நினைவு மண்டபம் புதுப்பிக்கப்படும்

பின்னர் தில்லையாடி முதல் மயிலாடுதுறை வரை தியாகசுடரை கலெக்டர் தொடங்கி வைத்து பேசுகையில், வெளிநாடு ஒன்றில் இந்தியர்களின் உரிமைக்காக போராடிய தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தை போற்றுவது நமது கடமையாகும். விரைவில் ரூ.74 லட்சம் மதிப்பீட்டில் தியாகி வள்ளியம்மை நினைவு மணிமண்டபம் புதுப்பிக்கப்படும் என்றார். முன்னதாக தில்லையாடிஊராட்சி மன்ற தலைவர் ரெங்கராஜ் வரவேற்றார். தொடர்ந்து சீர்காழி சப்-கலெக்டர் அர்ச்சனா, தரங்கம்பாடி தாசில்தார் புனிதா, செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் துளசிரேகாரமேஷ், தரங்கம்பாடி பேரூராட்சித்தலைவர் சுகுணசங்கரி குமாரவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் அனுசுயா சஞ்சய் உள்ளிட்ட பலர் வள்ளியம்மையின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட மக்கள் தொடர் அலுவலர் ரவிச்சந்திரன் செய்திருந்தார்.

நான்கு வழிச்சாலை பணி ஆய்வு

சீர்காழி முதல் காரைக்கால் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக சீர்காழியிலிருந்து பொறையாறு வரை சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேற்று திருக்கடையூர், ஆக்கூர், பண்டாரவாடை பகுதியில் நடைபெற்று வரும் நான்கு வழி சாலையை பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பணிகளை விரைவாகவும் தரமாகவும் குறிப்பிட்ட காலத்தில் முடிக்க சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட்டார். மேலும் மாமாக்குடி, திருக்கடையூர் ஆகிய இடங்களில் இடம் கையகப்படுத்தும் பணி ஒரு சில நாட்களில் முடிவடையும் என்றார். ஆயிவின் போது தேசிய நெடுஞ்சாலை திட்ட இயக்குனர் சக்திவேல், நெடுஞ்சாலை தாசில்தார் இந்துமதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்