மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி

விளாத்திகுளம் அருகே மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.;

Update: 2023-02-15 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின்படி விளாத்திகுளம் வட்டாரம் கோடாங்கிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 6, 7, 8-ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சிக்கு பெண் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி, வட்டார ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தற்காப்பு கலை பயிற்றுனர் சரமாரி ராஜ் பயிற்சி அளித்தார். மேலும் பயிற்சி மூலம் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை மற்றும் எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளும் விதமாக வகுப்பறையில் பாடங்களை உற்று நோக்கி கவனித்தல் போன்ற திறன்கள் வளரும் என்று கூறினார். பயிற்சியில் திரளான மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சியின் போது ஆசிரியர் இளவரசி, சந்திரவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்