மழை வேண்டி மரங்களுக்கு திருமணம்

ஆனைமலையில் மழைவேண்டி மரங்களுக்கு திருமணம் செய்து வழிபாடு நடத்திய ருசிகர சம்பவம் நடைபெற்றது.

Update: 2022-06-27 14:13 GMT

ஆனைமலை

ஆனைமலையில் மழைவேண்டி மரங்களுக்கு திருமணம் செய்து வழிபாடு நடத்திய ருசிகர சம்பவம் நடைபெற்றது.

திருக்கல்யாணம்

ஆனைமலை ஏ.வி.ஆர். நகர் வரசித்தி விநாயகர் கோவிலில் இல்லந்தோறும் இன்புற வேண்டி இறை திருமண விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரதோஷம் மற்றும் கிருத்திகை வழிபாடு நடந்தது. காலை 7.30 மணிக்கு அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

முன்னதாக கோவிலுக்கு 16 வகையான சீர் வரிசை பொருட்களை எடுத்து வந்தனர். பின்னர் காலை 9 மணிக்கு மகா தீபாராதனை, 10 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், அதை தொடர்ந்து 12.30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இதுகுறித்து விழாக்குழுவினர் கூறியதாவது:-

கொரோனா பரவல்

மழை இல்லாமலும், நோய்நொடியாலும் மக்கள் பாதிக்கப்படும் போது அரச மரத்தை சிவபெருமான் வடிவிலும், வேப்ப மரத்தை பார்வதி தேவி வடிவிலும் நினைத்து திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்பதும், நோய்நோடி இல்லாமல் மக்கள் நலமாக வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்களை அந்த நோயில் இருந்து காக்கவும், மழை வேண்டியும் அரச மரத்துக்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்