சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு

விளாத்திகுளம் வைப்பாற்று படுகையில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.;

Update: 2022-07-07 16:53 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விளாத்திகுளம் பேரூராட்சியுடன் இணைந்து மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில் வைப்பாற்று படுகையில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பணியை துரிதமாக முடித்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது விளாத்திகுளம் வனச்சரக அலுவலர் கவின், விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், பேரூராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி, கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் நவநீதக்கண்ணன், வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இமானுவேல், மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்