உப்பிலியபுரம்:
உப்பிலியபுரத்தை அடுத்த பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி கணபதி பாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பால்குட விழா நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்கள் பால்குடம், மாவுத்தட்டு எடுத்து வந்தனர். கோலாட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தார். கோவிலில் சிறப்பு அர்ச்சனைகள், ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.