மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திண்டுக்கல் அருகே உள்ள தோட்டனூத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.;

Update: 2023-02-10 19:00 GMT

திண்டுக்கல் அருகே தோட்டனூத்தில் மாரியம்மன், பகவதி அம்மன், காளியம்மன், கருப்பணசாமி ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களின் கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த 3 நாட்களாக யாக சாலை பூஜைகள் நடந்தன. அதனைத் தொடர்ந்து நேற்று காலை 10 மணிக்கு அழகர்கோவில், திருச்செந்தூர், வீரப்பூர், வயலூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் வேத மந்திரங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து விநாயகர், பகவதி அம்மன், காளியம்மன் மற்றும் கருப்பணசாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. அதன் பிறகு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டதை பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் தோட்டனூத்து ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் சரவணன், தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் பரமேஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகா செந்தில்குமார், அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர், தோட்டனூத்து ஊராட்சி செயலர் நாகராஜ், வார்டு உறுப்பினர்கள் நாகராஜ், தனலட்சுமி சசிகுமார், தனலட்சுமி கலையராஜா மற்றும் தோட்டனூத்து, அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்