மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
சிறுபாக்கத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.;
சிறுபாக்கம்,
சிறுபாக்கம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிந்ததையடுத்து நேற்றுமுன்தினம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம், அங்குரார்ப்பணம் நடைபெற்றது. பின்னர் காலை 10.30 மணியளவில் மாரியம்மன் கோவில் கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.