மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கட்டையன்குடிக்காடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை கிராம மக்கள் சொந்த செலவில் சீரமைத்தனர். அதனைத்தொடர்ந்து நேற்று மூன்று கால பூஜையுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.