மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா - இஸ்லாமியர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா 30 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.;

Update: 2023-10-27 15:51 GMT

சேலம்,

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு, இஸ்லாமியர்கள் இலவசமாக தண்ணீர் பாட்டில்கள் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு, 30 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் சேலம் ஜாமியா மஸ்ஜித் சார்பில், இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் வழங்கியது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.

 

Full View
Tags:    

மேலும் செய்திகள்