மாரியம்மன் கோவில் விழா
காரிமங்கலம் பேரூராட்சியில் மாரியம்மன் கோவில் விழா நடந்தது.;
காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சி 2-வது வார்டு வெள்ளையன் கொட்டாவூர் பகுதியில் மகாசக்தி மாரியம்மன் கோவில் திருவிழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் மாரியம்மனுக்கு கூழ் மற்றும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தது. மதியம் 12 மணிக்கு பெண்கள் கரகம், மாவிளக்கு எடுத்தல், தீமிதி விழா ஆகியன நடந்தது. மாலையில் கலை நிகழ்ச்சி வாணவேடிக்கை நடந்தது. இன்று ராமசாமி கோவிலுக்கு மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.