மாரத்தான் போட்டி

பொதுசுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவையொட்டி மாரத்தான் போட்டி நடந்தது.

Update: 2022-11-27 19:34 GMT

பொதுசுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவையொட்டி மாரத்தான் போட்டி நடந்தது.

மாரத்தான் போட்டி

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை நூற்றாண்டு விழாவையொட்டி தஞ்சையில் நேற்று மாரத்தான் போட்டி நடந்தது. தஞ்சை பெரியகோவில் முன்பு இருந்து தொடங்கிய இந்த போட்டியை மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் ஆண்கள், பெண்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், ஊழியர்களின் உறவினர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தஞ்சை பெரியகோவிலில் இருந்து புறப்பட்ட இவர்கள் பழைய நீதிமன்ற சாலை, காந்திஜிசாலை, ரெயிலடி, மேரீஸ்கார்னர், ராமநாதன்ரவுண்டானா, மேம்பாலம் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.

கேடயம்

ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கம், கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் சுகாதாரத்துறை ஊழியர்களின் உறவினர்களில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கும் பதக்கம், கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் நமச்சிவாயம், மாவட்ட கொள்ளைநோய் தடுப்பு அலுவலர் ஆடலரசி, உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்