மன்னார்குடி ஜெயங்கொண்டநாதர் கோவில் குளத்தை தூர்வாரி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்
மன்னார்குடி ஜெயங்கொண்டநாதர் கோவில் குளத்தை தூர்வாரி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்;
மன்னார்குடி ஜெயங்கொண்டநாதர் கோவில் குளத்தை தூர்வாரி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெயங்கொண்டநாதர் கோவில் குளம்
மன்னார்குடியில் பாமணி ஆற்றின் வடகரையில் ஜெயங்கொண்டநாதர் கோவில் அமைந்துள்ளது. பழமையான இந்த கோவில் எதிரிலேயே குளம் அமைந்துள்ளது. தற்போது கோவில் குளத்தை சுற்றி புதராக செடிகள் மண்டி காட்சியளிக்கிறது. மேலும் குளத்தின் படிக்கட்டுகளும் சேதமடைந்து உள்ளன. குளத்திற்கு பாமணி ஆற்றிலிருந்து நீர் வரும் வரத்து வாய்க்காலும் சீரமைக்கப்படாததால் ஆற்றில் தண்ணீர் வந்தாலும் குளத்திற்கு தண்ணீர் வராத நிலை உள்ளது.
தூர்வாரி சுற்றுச்சுவர்
இந்த குளத்தை தூர்வாரி செப்பனிட்டால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நீராடி செல்வதற்கு வசதியாகவும், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஜெயங்கொண்டநாதர் கோவில் குளத்தை தூர்வாரி சுற்றுச்சுவர் கட்டி சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.