சிறுகூடல்பட்டியில் மஞ்சுவிரட்டு

சிறுகூடல்பட்டியில் மஞ்சுவிரட்டு நடந்தது.

Update: 2022-06-14 18:05 GMT

திருப்பத்தூர், 

கவியரசர் கண்ணதாசன் பிறந்த ஊரான சிறுகூடல்பட்டியில் உள்ள மலையரசியம்மன் கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி  பால்குடம் விழாவும், விளக்குப்பூஜையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மஞ்சுவிரட்டு நடந்தது. இதையொட்டி மலையரசியம்மன் கோவிலில் வழிபாடு நடைபெற்று விநாயகர் கோவில் வழியாக நொண்டி கருப்பர் கோவிலில் வழிபாடு செய்து நாட்டார் நகரத்தார்கள் மற்றும் இளைஞர்கள், ஊர் பொதுமக்கள், வயிரவன் அம்பலம் தலைமையில் ஊர்வலமாக சென்று குன்னுவயல் பகுதியில் தொழுவிலிருந்த மாட்டிற்கு மரியாதை செய்தனர். பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. மஞ்சுவிரட்டில் மாடுபிடி வீரர்கள் ஒருசில மாடுகளை அடக்கியும் சில மாடுகள் தப்பித்தும் சென்றது. வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் வேட்டி, துண்டு, வெள்ளிக்காசு, குத்துவிளக்கு போன்றவை பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் புதுக்கோட்டை, சிராவயல், திருப்பத்தூர், ரணசிங்கபுரம், பட்டமங்கலம், மணக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 1000-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டது. ஒருசில மாடுபிடி வீரர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்