கலெக்டர் அலுவலகத்தில் தானியங்கி எந்திரம் மூலம் ரூ.10-க்கு மஞ்சப்பை

கலெக்டர் அலுவலகத்தில் தானியங்கி எந்திரம் மூலம் ரூ.10-க்கு மஞ்சப்பை விற்பனை செய்யப்பட்டது.

Update: 2023-04-03 18:35 GMT

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு காகித ஆலை இணைந்து வைக்கப்பட்டுள்ள மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரத்தினை கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். முதல்-அமைச்சர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மீண்டும் மஞ்சப்பை திட்டத்தினை கொண்டு வந்தார். அதன் அடிப்படையில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தானியங்கி மூலம் மஞ்சப்பை வழங்கும் எந்திரம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த தானியங்கி எந்திரத்தில் 10 ரூபாய் நாணயமாகவோ அல்லது 10 ரூபாய் நோட்டாகவோ செலுத்தினால் மஞ்சப்பை கிடைக்கும் என கலெக்டர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்