மனைவி நல வேட்பு விழா

Update: 2023-09-17 16:05 GMT


உலக சேவா சங்கத்தின் சார்பில் திருப்பூர் வாவிபாளையம் மனவளக்கலை மன்றத்தில் மனைவி நல வேட்புவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாவிபாளையம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை செயலாளர் எஸ்.ஆர்.மனோகர் தலைமை தாங்கினார். பேராசிரியர் மாதேஷ்வரன் வரவேற்றார். பேராசிரியர் கோமதி இறைவணக்கம், குருவணக்கம் தவம் செய்தார். விஷன் தலைவர் பிரபாகரன், வாவிபாளையம் தவமையம் மாரிச்சாமி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். உலக சமுதாய சேவா சங்க பேராசிரியர்க மோகன்-புவனேஸ்வரி தம்பதி சிறப்புரையாற்றினார்கள். பேராசிரியர் பிரபாகரன் உயிர்காப்பு தவம் நிகழ்ச்சியை நடத்தினார். பேராசிரியர் கமலம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

விழாவில் 40 தம்பதியினர் கலந்து கொண்டு ஒருவொருக்கொருவர் மாலை மாற்றிக் கொண்டனர். மேலும் காப்புக் கயிற்றை கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் கட்டி விட்டனர். இதேபோல் கணவன்மார் ரோஜாப்பூவை மனைவியின் தலையில் சூடி விட்டனர். மனைவிகள் கணவனுக்கு ஆப்பிள் பழத்தை வழங்கினார்கள். பின்னர் கண்களை மூடியபடி கைகளை கோர்த்துக் கொண்டு தவத்தில் ஈடுபட்ட தம்பதியினர், வாழ்க்கைத் துணையை முதன்முதலில் பார்த்த நாளையும், திருமண நிகழ்வு, மனைவி கருவுற்ற நாள் மற்றும் குழந்தை பிறந்த நிகழ்வு ஆகியவற்றை நினைவுகூர்ந்து இருவரும் கண்களை பார்த்தபடி பரஸ்பர அன்பை வெளிப்படுத்தினார்கள். முடிவில் துணை பேராசிரியர் பிரேம்குமார் நன்றி கூறினார். இதில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாவிபாளையம் தவமையத்தின் செயலாளர் சரவணன் தலைமையில் யுகேஷ்பிரபு, ராமமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விஷன் மாணவர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்