மணிப்பூர் சம்பவம் உலக நாடுகளுக்கு தலைகுனிவு - சீமான் பேட்டி

மணிப்பூர் சம்பவம் உலக நாடுகளுக்கு தலைகுனிவு என்று சீமான் கூறினார்.;

Update: 2023-07-28 06:27 GMT

மதுரை,

மதுரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மணிப்பூர் சம்பவம் உலக நாடுகளுக்கு தலைகுனிவு. பாரத மாதாவுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் தற்போது நிலவுகிறது. இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது மராட்டியமும் தமிழ்நாடும் தான். மாநிலத்திற்கு என்ன உரிமை உள்ளது. வரி... கல்வி எதுவுமே இல்லை.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை என்ன ஆனது?. ஒரு பிரச்சினை வந்தால் சிபிஐ விசாரணை கோருகிறார்கள்... தமிழக காவல்துறை என்ன செய்கிறது. கோடநாடு விவகாரத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் வீட்டிலேயே போதிய பாதுகாப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்