மணிமுத்தாறு அணை கால்வாயில் உடைப்பு

மணிமுத்தாறு அணை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது.;

Update:2023-01-14 02:16 IST

அம்பை:

அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அணையின் மொத்த கொள்ளளவு 118 கன அடி ஆகும். இதில் இருந்து ஆண்டுதோறும் 40 அடி கால்வாய் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு ஒரு பகுதியாகவும், 80 அடி கால்வாய் மூலம் ராதாபுரம் சாத்தான்குளம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 12,018 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலங்களுக்கு மணிமுத்தாறு அணையில் உள்ள தண்ணீரில் கொள்ளளவை பொறுத்து திறந்து விடப்படும்.

நேற்று முன்தினம் 80 அடி கால்வாயில் இருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்தநிலையில் நேற்று மணிமுத்தாறு கரடிகுளம் பகுதியில் கால்வாயின் கரை பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியே செல்கிறது. விவசாய பாசனத்திற்காக தண்ணீர் திறந்த விடுவதற்கு முன்பே கால்வாயில் உடைப்பு ஏதும் உள்ளதா? என அரசு பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி இருந்தால் இந்த உடைப்பு ஏற்பட்டு இருக்காது என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு கரையை பலப்படுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்