வீரமாத்தி அம்மன் கோவிலில் மண்டல பூஜை
வேடசந்தூர் அருகே வீரமாத்தி அம்மன் கோவிலில் மண்டல பூைஜ நடந்தது.
வேடசந்தூர் அருகே உள்ள காளகவுண்டன்புதூரில் ஸ்ரீ வீரமாத்தி அம்மன், ஸ்ரீ நாகம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து கோவிலில் 48 நாள் மண்டல பூஜை நடந்தது. இந்நிலையில் நேற்று 48-வது மண்டல பூஜை மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதைெயாட்டி பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீர் ஊற்றப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது.
இந்த பூஜையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் (ஆர்.புதுக்கோட்டை) வித்யாவதி கோபால்சாமி, (குளத்துப்பட்டி) சவடமுத்து, (கோவிலூர்) செல்வமணி நடராஜன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.