வாலிபரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல் விவகாரம்... காற்றாடி பறக்கவிட்ட 6 பேர் அதிரடி கைது

அவர்களிடம் இருந்து ஆறு காத்தாடிகள் மற்றும் நான்கு நூல் காண்டுகள் மற்றும் மாஞ்சா நூல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2023-04-13 13:21 GMT

சென்னை,

சென்னை மதுரவாயல் பைபாசில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபரின் கழுத்தை காற்றாடி மாஞ்சா நூல் அறுத்ததாக சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டு இருந்தார்.

இதையடுத்த மதுரவாயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தடை செய்யப்பட்ட காற்றாடி பறக்க விடப்படுகிறதா என போலீசார் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது தடை செய்யப்பட்ட காற்றாடி பறக்கவிட்ட துரை, மாணிக்கம்,பாலாஜி, கணேசன் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆறு காத்தாடிகள் மற்றும் நான்கு நூல் காண்டுகள் மற்றும் மாஞ்சா நூல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

 

Full View


Tags:    

மேலும் செய்திகள்